பிரிவு ஒரு அழகிய கவிதை

பிரிவு - இன்னும் உறவுகளை நெருக்கமாக்குகிறது
பிரிவு - சொந்தங்களை அழகிய கவிதையாகுகிறது
பிரிவு - அன்பை புரிய வைக்கிறது....
பிரிவு - நினைவுகளை உங்கள் மீது குவிக்கிறது
பிரிவு - அதனால் நம்மை த்யானிக்க வைக்கிறது
பிரிவு - பிரிந்தவரின் மதிப்பை சொல்கிறது
பிரிவு - சந்திக்காமலேயே சந்தோசிக்க வைக்கிறது
பிரிவு - சரிவு அல்ல - வாழ்வில்
பிரிவு - செறிவு எனப் புரிந்து கொள்வோம் ...
பிரிவு - அழ வைக்கிறதா ? அப்போது
பிரிவு - அழகான நம் விழிகளை சுத்திகரிக்கிறது
பிரிவு - மிக மிக அழகானது எனவே
பிரிவோம் - சந்திப்போம்....!

எழுதியவர் : (13-Jan-12, 6:45 pm)
பார்வை : 504

மேலே