நீ மட்டும் ஏன் செய்கிறாய் ???
இதுவரை எந்த கெடுதலும்
செய்ததில்லை நான் உனக்கு .............
உனக்கான எவ்வித உரிமைகளையும்
நான் தட்டி பறித்தது கிடையாது ..................
உன் மகிழ்ச்சியான நிலைமையை
ஒரு போதும் நான் மாற்ற நினைத்தது கிடையாது ...
உன் முன்னேற்றத்தையோ முயற்சியையோ
நான் குலைக்க எண்ணியது கூட கிடையாது ..........
உன் வேலையை கடைசி நிமிடத்தில்
வேறு நபருக்கு நான் வாங்கி கொடுத்ததுமில்லை ....
உன் காதலியை வேறொருவருக்கு
நான் மணமுடித்து மகிழ்ந்ததுமில்லை ..........
உன் தோழியை உன்னிடமிருந்து பிரித்த
பாவத்தை ஒரு போதும் நான் செய்யவுமில்லை....
உனக்கானவர்களை உன்னிடமிருந்து பிரித்து
உன்னை தனி மரமாக்கியவனும் நானில்லை .......
நீ விம்மி அழும் போதும் உன் கண்ணீர் துடைக்க
யாருமில்லாமல் செய்த பாவியும் நானில்லை ........
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியையும்
தகர்த்தெறியும் தன்னல புக்தியும் என்னக்கில்லை ..
இவ்வாறு எவ்வித தீமையும்
உனக்கு செய்யாத எனக்கு .......
நீ மட்டும் ஏன் செய்கிறாய் இறைவா??? எனக்கு
நான் மேற்சொன்ன தீமைகளை .................