என் இனிய தோழனே..!!!
என் இனிய தோழனே..!!!
உன் கையோடு கை சேர்த்து நடக்கையில்
என் கவலைகள் மறந்தேன்..
உன் தோள்மீது சாயும் போது
என் துயரங்கள் மறந்தேன்....
உன்னோடு உரையாடும் நேரம்
இந்த உலகத்தையே மறந்தேன்...
நட்பென்ற ஒரு சொல் நம்மை இணைத்தது
களங்கம் இல்லா உன் அன்பு அதில் கலந்தது
பரஸ்பரம் புரிந்தோம்
பறிமாற்றங்கள் கொண்டோம்
என் கனவுகள் நிறைவேற நீயும்
உன் லட்சியங்கள் நிறைவேற நானும்
இறைவனை வேண்டுகிறோம்....
நட்பின் இலக்கணம் புரிந்தேன் உன்னால்
இனி உன்னை நீங்கி வாழ இயலாது என்னால்...
என் இனிய நண்பனே உன் நட்புக்கு தலை வணங்குகிறேன்....
இன்னொரு பிறவி இருக்குமாயின் உன்னையே அன்னையாக பெற வேண்டுகிறேன்.
நிறம் மாறா நட்புடன் உன் தோழி.......!!!!!!