அனுபவம் கிட்டுமோ . . .

வார்த்தைகள் கூட
சில நேரம் வலுவிழந்து
போகின்றன - உன்னிடம் . . .

இமைகளுக்கு தடையேது
விழிகளைத் தழுவ - என்னைத்
தழுவ தடையேது உன்
கரங்களுக்கு . . .

சில நேரம் நீ அறியாமல்
உன்னை தீண்டி உன்
வாசத்தை சுவாசிக்க
நேர்கையில் - சிலிர்ப்பு
ஒன்று ஓடுகிறதே
உணர முடிகிறதா உம்முள் ?

ஒருவேளை விழித்திருக்கும்
கண்களுக்குள் கனவுகளால்
ஒரு மாளிகை கட்டி
களிதிருப்பவளுக்குத் தான்
நேரிடுமோ இந்த அனுபவம் . . . .?

எழுதியவர் : honey (19-Jan-12, 3:27 pm)
பார்வை : 253

மேலே