உன்னோடு தான்
அன்று
எதுவும் இல்லை எழுத
உன்னைப் பார்க்கும் முன்னே...
இன்று
பேனாக்களில் மை தீர்ந்துவிடுகிறது
வற்றாத ஊற்றாய் உன் நினைவுகள்
எழுத்தில் உயிர் பெறுகிறேன் நான்....
உன்னையே எழுதுகிற பேனா
என்னை உயிர்ப்பிக்கும் பேனா மை
என்றும்
உன் நினைவோடு வாழ்வதா
உன் னோடு வாழ்வதா
எதுவானாலும் உன்னோடு தான்...