உன்னிடத்தில் கண்டேன்

சின்னஞ்சிறு தோடுகளும்
படிந்து வாரியே கூந்தலும்
நிலவில் உள்ள கார் மேகங்கள் போன்று
உன் கண்களில் உள்ள கண்மையும்
அதிர்ந்து பேசாத இனிய மொழியும்
பூமி தொட மெல்லிய பாதத்தின் நடையும்
என்றும் வாடாத உன் புன்னகையும்
பூக்கள் குடி ஏற துடிக்கும்
கார் மேக கூந்தலும்
கைகளை சூற்றியும் , வானவில்லை பேசும்
அந்த வளையல்களின் பேச்சும்
இடையினை மறைக்கும்
உடையின் பரிமாணமும்
கவி பாடும் இரு கால் கொலுசின் காதலும்
மொத்தத்தில் ..........
முடி முதல் அடி வரை
அவள் ஒரு சொர்கத்தின் படைப்பு .....




எழுதியவர் : தினு (31-Aug-10, 12:53 am)
சேர்த்தது : dinu
Tanglish : unnidathil KANDEN
பார்வை : 545

மேலே