கண்ணத்தில் குழி

உன் சிரிப்பில் மயங்குபவன்
விழுவதற்கோ...

கண்ணம் சிவந்தாலே அழகு - நீ
சிரித்தாலே அழகு
குழி உள்விழுவதால்...

யாரை விழவைக்க
உன் கண்ணத்தில் குழி..

வரிசையான பற்கள்
வரி மாறும் போது
உன் உதட்டோரம்
சிரித்து விழுகிறது
கண்ணத்தில்,,

சிரிப்பே அழகு
அதற்கே அழகு
கண்ணத்தில் குழி...

சிரிப்பிற்கு
சிறப்பு இலக்கணம்
கண்ணத்தில் குழி...

எல்லோரும் சிரிக்கிறார்கள்
உன்னில் மட்டும் விழுகிறார்கள்
சிரிப்பிலும் குழியிடுவதால்..

மயக்கத்திற்கு எத்தனையோ வழிகள்
சிரித்தே மயக்குவர் சிலர் - ஆனால் நீயோ
சிரித்து மயக்கினாலும்
உன்னிலே விழ வைக்கிறாய்
கண்ணத்தில் குழியிட்டு....

ஆப்பிள் கண்ணத்தில்
யாரோ கடித்ததால்
சிறு ஒட்டை
உன் சிரிப்பில் குழி...

உன் சிரிப்பில் குழி விழுகிறது
இது உலக சாதனை அல்ல
ஆனாலும்
விடாமல் சொல்கிறேன் காண்போரிடம்...

எழுதியவர் : அவிகயா (31-Aug-10, 12:26 am)
சேர்த்தது : avighaya
பார்வை : 3107

மேலே