விவசாயி

தண்ணீரை பாத்திகட்டி
நிலத்தினை உழுதிட்டு
நெல் தனை தூவிட்டு
வருண பகவானே பொய்காதே என வேண்டி
சூரிய பகவானே துணை புரி என பிரார்தித்து
விளைந்திட்ட நெல் தனை காக்க
வருணனே புயல் ஆகாதே
சூரியனே ஒளி வீசு என வேண்டி
துணை புரிந்த இயற்கைக்கு நன்றி சொல்ல
பொங்கல் இட்டு வணங்கிடும் உழவனுக்கு
உலகத்தாருக்கு உணவிடும் உழவனுக்கு
கண்ணீரை காணிக்கை ஆக்கும் உலகம்
இடை தரகன் லாபத்தை அள்ளி கொள்ள
உலகத்தார் பசி போக்கும் உனக்கு
முன்று வேளை கஞ்சி பெரிய விஷயம்
எம் என் சி இல் பணிபுரிந்தால் லட்சங்கள்
வயலில் பணிபுரிந்தால் அலட்சியங்கள்
உழவ விழித்திடு வாழ படித்திடு

கீதா பாலசுப்ரமணியன்

எழுதியவர் : (26-Jan-12, 6:16 pm)
சேர்த்தது : geetha balasubramanian
Tanglish : vivasaayi
பார்வை : 209

மேலே