ஏழை விவசாயின் அசைவ அறுவடை

நிலத்தை தோண்டுகிறேன்
இன்னொரு எலி கிடைத்தால்
இன்றிறவு என் வீட்டு ப்பசியை
போக்கிவிடுவேன்,
மானமுள்ள விவசாயியை
கண்ணில் பார்த்து
நாளாயிற்று, இன்று
கந்தலும் கிளிஞ்சலுமாக அல்ல
அதுவும் இல்லாமல்
முற்றும் துறந்த முனிவராக,
மழைக்கால நம்பிக்கையை
வெய்யில்கால வறச்சி வந்து
சரிசெய்துகொண்டிருக்கிறது,
என் பிள்ளைக்கு
மாதம் மும்மாரி என்பதை
எப்படி புரியவைப்பேன்,
தானியக்களஞ்சியங்கள்
தந்த எங்களுக்கு
இன்று கஞ்சி தொட்டியே
உயிர் காக்கிறது,
வேளான்மையற்ற
அம்மன வயல்களை காணத்தான்
இந்த கண்களோ,
வானம் பார்த்த பூமி என்பதை
பூமி பார்த்த வானம்
என்றாக்குங்கள்
அப்பொழுதாவது
என் பூமியின்
நிலையைப்பார்த்து
கண்ணிர் சிந்தட்டும்
அந்த வருண பகவான்,

எழுதியவர் : கார்த்திக் கவின் (27-Jan-12, 12:32 pm)
பார்வை : 410

மேலே