தமிழ்பாப்பா- பொள்ளாச்சி அபி

கண்ணாடி பார்க்கும் பாப்பா.
யாரும் அறியாமலே பாப்பா
கனவில் வந்தது யாருப்பா..?
தன் நிழலுகிட்டே கேப்பா..

உதட்டோரமா சிரிப்பா..
அதுக்கு அர்த்தமில்லாம விழிப்பா..
அனுபவங்களைக் கோப்பா..
அத கவிதையாக்கப் பாப்பா..

இவ எப்பவும் தமிழ்பாப்பா
அதாலே வருதேப்பா..தமிழ்ப்பா..
அப்பப்பா..அப்பப்பா..
இது எப்பூடீப்பா..?

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (28-Jan-12, 9:08 pm)
பார்வை : 274

மேலே