காவடி சிந்து மெட்டு.(erivarak kaalnoguthe mettu)

(ஏறிவரக் கால் நோகுதே....... நீ இறங்கி வந்து அருள் செய்யப்பா............. என்ற முருகன் பாடல் மெட்டு ( புஷ்பவனம் குப்புசாமி பாடியது)

அம்மா.............

பைந்தமிழ் தேன் சொல்லெடுத்து பல
பாக்கள் இசைத்து உன்னை என்றும்
பாடிப் பாடி போற்றி வந்தேன் உந்தன்
பத மலரை எண்ணி எண்ணியே............

பாசம் மிகுந்த எந்தன் தெய்வமே நீ
நேசம் உடன் எம்மைக் காப்பாய்
வாசம் மிகு மலர் தன்னால் பல
வாசம் மிகு மலர் தன்னால் மணம்
வீசும் உன்மலர் பாதம் பணிந்தேன்

அஞ்சல் என்று நாளும் காப்பாய் உன்னை
கெஞ்சி வழி பாடும் என்னை
நெஞ்சுருக வேண்டி நின்றேன்.... அம்மா
நெஞ்சுருக வேண்டி நின்றேன் என்
கொஞ்சும் தமிழ் பாடல் கேட்ப்பாய்

இருக்கும் இடம் தன்னை விட்டு
என்றும் அகலாது இருப்பாய்.............. நான்
இருக்கும் இடம் தன்னை விட்டு......... நீ
என்றும் அகலாது இருப்பாய்

விருப்பு வெறுப்பு ஏதும் இன்றி
பல பொறுப்புடனே என்னைக் காத்தாய்.. (பைன்

எழுதியவர் : ஸ்ரீ G . S . விஜயலட்சுமி (30-Jan-12, 8:06 pm)
பார்வை : 739

மேலே