உயிர்(எழுத்து)இந்தியா (அன்றும் இன்றும்) பகுதி 2

ஊரெங்கும் கலையும் கலாச்சாரமும் சிறந்தது

ஊறிய நாகரிகத்தில் அவ்விரண்டும் இறந்தது

எதுவும் தனக்கென்று எண்ணாதோரின் ஆட்சி

எல்லாம் தனக்கென்று எண்ணுவோரின் ஆட்சி

ஏற்றமும் வளர்ச்சியும் பெற்று விளங்கியது

ஏமாற்றமும் வருத்தமுமே கடைசியில் மிஞ்சியது

ஐந்தில் நால்வர் நல்லவர் ஆட்சியில்

ஐந்தில் நால்வர் கெட்டவர் ஆட்சியில்

ஒற்றுமையும் ஒழுக்கமும் நிறைந்து இருந்தது

ஒன்றன்பின் ஒன்றாக இரண்டுமே குறைந்தது

ஓசையின்றி இந்தியா வலுவிழந்து உள்ளது

ஓரளவாவது உணர்ந்தால் நாட்டுக்கு நல்லது

(ஒளவை பிறந்து தமிழை வளர்த்தார் அன்று

ஔடதம் குடித்து அத்தமிழே இறக்கும் இன்று)






உயிர் இந்தியா .......... இந்தியா ஆகாமல் பார்த்துகொள்வது நம் கையில் தான் உள்ளது ...

எழுதியவர் : கலைசொல்லன் (31-Jan-12, 6:32 am)
பார்வை : 364

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே