நண்பன்
கடல் என்னும் கல்லூரியில்
அலையாய் வரும் ஆசிரியருடன்
துள்ளி திரியும் மீன்களாய்
வாழ்ந்தோம் -
உறவுகளை மறந்தோம்
ஒரே உயிர்களாய் வாழ்ந்தோம்
முன்னேற நினைபவனை
ஏணியாய் ஏற்றிவிட
முயன்றோம்- கவலை
என்பதை மறந்தோம்
பிரியும் நேரத்தில் சிரிப்பு
என்பதை மறந்து விட்டோம் -
நண்பனே காலம் நம்மை
பிரித்து சென்றாலும்
உன்னுடன் வாழ்ந்த நினைவுகள்
என்னுள் துடித்து கொண்டுதான்
இருக்கிறது- என் உயிர் இருக்கும் வரை