உன் பிம்பம் நானாக
மரத்தின் பயன்
நிழல் தரும் வரை .....
மழை வந்த பிறகு
நிழலைத் தேடி
யாரும் வருவதில்லை.
பாலத்தின் பயன்
பயணம் முடியும் வரை .......
பயணம் முடிந்த பிறகு
பாலத்தை யாரும்
பின்நோக்கி பார்ப்பதில்லை.
குயில் பாட்டு
இரயில் பயணத்தில்
எடுப்படுவதில்லை...
குறைகள் சொல்லி அழவும்
எனக்கு துணையாய் யாருமில்லை ...
நட்பு என்பது ஒரு காலக்கண்ணாடி-அது
என்னை தவிர வேறுயாரையோ
காட்டும் என்றால் .....
உடைந்த கண்ணாடியாய் -நான்
உருக்குலைந்து போவேன் ...