பொள்ளாச்சி அபி பேசுகிறேன்.!

இப்படியும் நடந்தது என்ற,கதையில் வரும் ஏமாந்த கதாபாத்திரம் நான் அல்ல நண்பர்களே.!
பொள்ளாச்சி அபி என்ற பெயரைக் கண்டு,சமீபத்தில்,என்னைத் தேடிவந்து பாவம் ஜொள் விட்டுச் சென்ற ஒரு அப்பாவி நண்பரின் நிலைமை,மிகவும் பரிதாபப்படும்படியாக இருந்தது.மேலும்,கம்பீரமான ஆண்பிள்ளைபோலக் காட்டிக்கொண்டு வந்த அவர்,அசடு வழிந்து,தான் ஏமாந்ததை நினைத்து,வாய்விட்டு அழுதபடி திரும்பிச் செல்லும்போது,எனக்கு மிகவும் சங்கடமாகவும் போயிற்று.மேலும் தான் ஏமாந்த விதத்தை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் என்று வாக்குறுதியும் வாங்கிச் சென்றதைக் கண்டபோது,மனிதரில் இத்தனை நிறங்களா..? என்றுதான் தோன்றியது.அந்த அனுபவத்தைத்தான் இங்கு எழுதினேன்.

சரி யாரிடமும் சொல்வதில்லை என்று வாக்குறுதி அளித்திருந்தும்,இங்கு அதனைப் பதிவு செய்துவிட்டீர்களே என்று தவறாக யாரும்,வாக்குறுதியை மறந்த அரசியல்வாதியைப் போல என்னை நினைக்க வேண்டாம்.
ஒரு பெயரை வைத்துமட்டுமே,பெயருக்குரியவர் இப்படித்தான் என்று அனுமானிக்க கூடாது.மேலும்,கவிதை,கதை என்று இருக்கும் இலக்கியப் படைப்பாளிகள் ஓரளவாவது உலகப்பார்வையுடனும் இருப்பார்கள் என்பது எனது அனுமானம்.அந்த நண்பர் அதனை முற்றிலும் தகர்த்தபோது எனக்கு வருத்தமே மிஞ்சியது.
இனிமேல் யாரும் இவ்வாறு தாங்களும் ஏமாந்து,தன்னைப் பெரிதாக நினைத்திருந்த அவர்களின் பார்வையிலிருந்து தரம் இறங்கிப்போகும் அவல நிலையையும் இனி சந்திக்கக் கூடாது என்ற எண்ணமுமே இந்தப் பதிவின் காரணமாக அமைந்தது.இந்த அனுபவங்களை வைத்துத்தான் “இப்படியும் நடந்தது” எழுதினேன்.

பொள்ளாச்சி அபி என்றால் பெண்ணா..? அபிராமியா..? அபிசுந்தரியா.?
இன்னும் புதுப்புதுப் பெயரால் என்னை விளித்து,நிறைய தோழர்கள் சந்தேகம் கேட்கின்றனர்.இப்படிக் குழப்பம் வரக்கூடாது என்பதால்தான்,எனது புரொபைலில் ஆண் என்று குறிப்பிட்டுள்ளேன்.
ஆனால் அபி என்பதன் பெயர்க்காரணம் பற்றி,இன்னொரு முறை அவசியம் சொல்வேன்.நீங்கள் படிக்கும் நேரத்தில் அதுவும் சுவாரஸ்யமாக இருக்கவேண்டும் அல்லவா.?

ஆங்...இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல விட்டுப்போயிற்று.அப்புறம் என்னைத்தேடி வந்த நண்பர்,தற்போது வேறு ஒரு பெண்,செல்போனில் பேசக்கூடாது,வெறும் எஸ்.எம்.எஸ் மட்டுமே அனுப்பச் சொல்லி கண்டிசன் போட்டு இருப்பதாகவும்,இப்போது அவளை சின்சியராகக் காதலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பேசுவோம். அன்புடன் பொள்ளாச்சி அபி.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (2-Feb-12, 10:44 am)
பார்வை : 605

சிறந்த நகைச்சுவைகள்

மேலே