முத்தமிழே!

பட்டுத் துகில் விரித்து
மொட்டுக்கள் பல பரப்பி
கட்டிக் கரும்புனை
சொட்டச் சொட்ட உரைப்பேன் நாவில்!
தாகமென நானிருந்தேன்
மேகமென நீயிருந்தாய்-ஒரு
பாகமென நீயிருக்க
தேகமது வேகுமோ தீயில்!
நீல வானின் நீளம் கண்டேண்
நீல வண்ண கடலின் ஆழம் கண்டேண்!
ஆற்று மணலை எண்ணி பார்தேன்!
தமிழே உன் வண்ண வண்ண பெருமைகளைஎண்ணி எண்ணி எண்ண பார்த்தேன்!
வியந்தேன் கொஞ்சம் வியர்தேன்!
சீரூற்றும் செந்தமிழே
பார் போற்றும் பைந்தமிழே
மூவேந்தன் மடி தவழ்ந்த முத்தமிழே உன் முன் நின்று மொழிகின்றேன் பொற் பாதம் பணிகின்றேன்! காப்பாய் நீயே!

எழுதியவர் : selvasathis (3-Feb-12, 10:50 pm)
சேர்த்தது : தென்றல்
பார்வை : 373

மேலே