நெல்லெச சீமை எங்க ஊரு

நெல்லெச சீமை எங்க ஊரு
நிம்மதி தரும் சொந்த ஊரு
நீங்க வந்து பாத்தாக்க......
நெசமாத்தான் ஒனர்வீக......!
ஆரொன்னு ஓடுது.....
அது தாமிர பரணி..............!
அகத்தியர் கமண்டலத்தில்
அது தோன்றி தமிழ் சொல்லுது...!
அல்வாக்கடை அம்மன்சந்நிதி
அப்புறமா சாமி சன்னதி.....
நூலகமும் கல்லூரியும்
நெல்லைப் போலே சுத்தி இருக்கு...!
காதலுமிருக்கு வீரமுமிருக்கு
கவிதையோட கடமை இருக்கு
கருணையும் கூடத்தானே
கண்களிலே கொட்டியிருக்கு
கட்டாயம் வாங்க நீங்க
கவிதையோட காத்திருப்பேன்...!

எழுதியவர் : (3-Feb-12, 5:34 pm)
பார்வை : 236

மேலே