இது ஒரு அழுகையான தாலாட்டு
கயித்துக் கட்டிலில்
கயிரக் கழட்டி
தொட்டிலுக்கு நான்
மாட்டிக் கிட்டேன்.....!
பத்து மாசம் வரதுக்குள்ளே
பாச மகன நீ பாக்கலையே.....!
பாவி எமன் கொண்டு போயிட்டான்
பரிதவிச்சி நா அழுகிறேனே.....!
தொட்டில் கயிறில் வந்து தாலாட்டு
தூங்கட்டுமையா நமது மகன்.....
வெள்ளைச் தொட்டிலையும்
விதவையாக்கிப் விருட்டுன்னு போனவனே....!
கயிரில்லா கட்டில் போலே
வாழ்க்கை வெறுமை ஆனதடா...!
காதல் மொழி நினைக்கையிலே
கண்ணீர் நெஞ்சில் பெருகுதையா...!.