திவ்யா என் காதலி
தவறான தொலைபேசி அழைப்பில் வந்தால்
சண்டையில் ஆரம்பித்த முதல் சந்திப்பு
நாளடைவில் நட்பாக மாறியது.
"""முகம் பார்க்காத காதலுக்கு
முகவரியாய் கொடுத்தாள்
தொலைபேசி எண்ணை"
கவிதை கேட்டால் ,,,
அவளிடம் சொன்ன முதல்கவிதை
""""அவளை கண்டால்
பெருமூச்சு வாங்கலாம்
உதடுகள் பற்களோடு பேசலாம்
உலகே மறக்கலாம்
உயிரே பிரியலாம்"""" என்றேன்,
பல கவிதைகள் அவளுக்காக சொன்னேன்.
சில மாதங்களுக்கு பிறகு நேரில் சந்தித்தோம்
நட்பு காதலாக மாறியது ,
அவளை முதல் முறையில் பார்த்த நேரம்
""""முதல் முதலாய்
அவள் முகம் பார்த்த நேரம்,
சேகரித்த வார்த்தை எல்லாம்
சேதாரமாய் போனது,
உயிர் மட்டும் ஊசலாடியது
அவள் உதடசைவில்,
அவளுக்காக என்றவுடன்
என் கையில் இருந்த
சிகப்பு ரோஜாவும்
சிலிர்த்து போனது ,
சின்னாபின்னமானது
சிறு இதயம்,
சிறகடித்து பறந்தேன்
சிகரம் தொட................. """""
நன் புகைபிடிப்பது அவளுக்கு பிடிக்கவில்லை, அதனால் அவள் சில நாட்கள் என்னுடன் பேசவில்லை.
"""""அவள் என்னுடன் பேசாத நாட்கள் .......,
புகை எனக்கு பகையாகி போனது
புலம்பல் மட்டும் துணையாகி போனது,
அவள் என்னுடன் முன்பேசிய வார்த்தைகள்
பேசாமலே சினமாகி போனது--இன்று
என் உயிர் மட்டும் பிணமாகி போனது,
வாடி போன ரோஜாவாக
கண் முடி கனவு கண்டேன்
கல்லறை முழுதும் ஆண்கள் பிணமாக,
உயிரே பிரிந்தாலும்
உணராத வலி --இந்த
காதலில் மட்டும் ஏனோ?"""
சில நாட்கள் கழித்து அவள் என்னுடன் மௌனத்தில் மட்டுமே பேசுவாள்.
""""பூவில் விழாத சிறுதுளி,
பறவை இல்லா வானம் ,
வாசம் இல்லா மல்லிகை ,
கொளைகாத நாய்கள்,
பேசாத உதடுகள் ,
கேட்காத செவிகள் ,--என
அவளை போல்
எல்லாம் மௌனமாகிவிட்டன
அவளது நினைவகளை தவிர....... """"
எனக்கு தெரியாமேல அவளுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணமாகிவிட்டது.
""""அவள் நினைவு என்னும்
பெரும் சுமையை சுமக்க --என்
சிறு இதயம் போதாது ,
அவள் நடந்து போன
பாதை தேட ---என்
சிறு விழிகள் பத்தாது
அவள் கொடுத்த முத்தங்களை
கணக்கெடுக்க--என்
சிறுமுளையில் இடம் ஏது?
அவள் போன் காலுக்காக
இன்றும் காத்திருக்கிறேன்,
காதல் கனவுகள்
கருவறையில் இருந்து
கல்லறை செல்லுமா?--இல்லை
காதலில் வெல்லுமா? """
இன்று என் கவிதைகள் சோகமாகிபோனது.
""""என் காலம் தள்ள
உன் காதல் போதும்
என் பெயர் சொல்ல
நீ அருகில் இருந்தால்
சோக கவிதைகள்
சொல்லாமல் போகும். """"
அவளிடம் சொன்ன கடைசி கவிதை
" எனக்காக ஒரு கவிதை
'திவ்யா'
உன்னக்காக ஒரு கவிதை
'கார்த்திக்' "