இருக்கும்வரை காதலிக்காக வாழ வேண்டும்...இறந்த பின்பும் காதலிக்காக வாழ வேண்டும்...

நான் மரணித்தவுடன்
மண்ணோடு மண்ணாக
எனை புதைக்கும்போது
கல்லறையின் மீது
கையினை மட்டும் வெளியே
விட்டு விட்டு எனை புதையுங்கள்...
என்றாவது ஒருநாள்
கல்லறையின் மீது
காதலி கண்ணீர் சிந்தினால்
சிந்தும் கண்ணீரை
அவள் கை விரல்கள் துடைப்பதற்குள்
என் கை விரல்கள்
அவள் கண்ணீரை துடைக்க வேண்டும்...
இருக்கும்வரை காதலிக்காக வாழ வேண்டும்...
இறந்த பின்பும் காதலிக்காக வாழ வேண்டும்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (5-Feb-12, 8:27 pm)
பார்வை : 275

மேலே