நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

பழமொழயில் பிழை.( ஒரு பார்வை )

முன்காலத்தில் உழுவதற்கும் பால்கறப்பதர்க்கும்
நல்ல மாடு வாங்க சந்தைக்கு செல்வார்கள். சந்தையில் மாடுகள் அசை போட்டு கொண்டோ பராக்கு பார்த்துகொண்டோ இருக்கும். நல்ல மாடு எது என்று தெரிந்துகொள்ள ஒரு சரியான வழியை பின்பற்றினார்கள்.அது?
மாட்டை முதுகில் தட்டியோ, வாலை முறுக்கி விட்டோ ஓட்டி விடுவார்கள். இச்சோதனையில் சரியில்லாத மாடு சோம்பலாக நிற்கும். அதை வாங்க மாட்டர்கள். சரியான,தரமான மாடு கம்பீரமாக நடந்து செல்லும். தரமான மாடு நடந்து செல்லும் போது அதன் கால் "சுவடு" மணலில் ஆழமாக பதியும். உடனே " நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு " இந்த மாட்டை வாங்கிடலாம் என்பார்கள். சுவடு எனபது சூடு என்பதாக திரிந்துவிட்டது. எனவே நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பதை சுவடு என்று திருத்தி வாசிக்கவும்.
வேண்டுகோள் : இதை வாசிப்பவர்கள்இதை பற்றி
தெரியாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும். நன்றி!

எழுதியவர் : சன் சம்சுதீன் (8-Feb-12, 1:38 pm)
பார்வை : 1071

மேலே