இயற்க்கை மரணம் கூட இம்சைதான்

எடிசன் தந்த மின்சார விளக்கை
எழுந்து அணைக்க முடிகிறது.

குடிசை துவாரத்திலும்
வானம் தெரிகிறது.

ஒரு மரம்
நாலு தலைமுறைக்கேனும்
நிழல் தருகிறது.

ஆயுள் உள்ளவரை
சொந்த காலில்
எவரஸ்ட் ஏறுகிறது
எறும்பு.

நாம் ?

சரித்திர ஆலயத்தின்
சாமிகளாய் வீற்றிருக்கும்
சாதனையாளர்கள்
நம்மைப்போல்
விந்தணு சேர்கையில்
விருட்சமானவர்களே!

ஆஸ்திரியாவின் கட்டாய இரானுவமுறைக்கு
அஞ்சி ஜெர்மனி வந்தவரே
ஹிட்லர்.

குட்டி பிராயத்தில்
குதிரை மேய்த்தவரே
ஷேக்ஸ்பியர்.

மழுங்கிப் போகும்
மனித வாழ்வில்
தலைமுறைகள் கடந்தும்
நம் இதய சுவர்களில்
இவர்கள் படம்
அனுமதியின்றி
ஆணியடிக்கபடுகிறது.

ஒவ்வொரு நொடியும்
உன் சிந்தனையை
கூர்தீட்டி கொண்டிரு.

எல்லா விடியலிலும்
எதிர்நீச்சல் அடிக்க
தயாராயிரு.

சாதிப்பதே உன் கொள்கையா ?
நிமிடங்களுக்குள்
நிலவுக்கு போய்வர
நிரந்தர வாகனமொன்றை
கண்டுபிடி.

சம்பாதிப்பதே உன் லட்சியமா?
பில்கேட்சை உன்னிடம்
பிச்சை கேட்க்க வை.

தோல்வி பூகம்பம்
உன் பூமியை
புரட்டிபோடலாம்.

துயர புயல்களால்
உன் ஆலமரம்
தூக்கியெரியபடலாம்.

மருகாதே!
மறுமுறை எழுந்து நிற்க
மறக்காதே!

சாக்ரடீச்க்கு விசகோப்பை
அலேசாண்டருக்கு விசக்காயச்சல்
சீசருக்கு துரோகம்
இயேசுவுக்கு சிலுவை
நபிகளுக்கு கல்லடி
நெப்போலியனுக்கு புற்றுநோய்
கட்டபொம்மனுக்கு தூக்குமரம்
காந்தியடிகளுக்கு துப்பாக்கிச்சுடு

இப்படியிருக்க
இயற்க்கை மரணம் கூட
நமக்கு
இம்சைதான்.

காயங்களை சேர்த்துவைத்தால்
மேதைகளும் நம்
வம்சம்தான்.

---தமிழ்தாசன்---

எழுதியவர் : ----தமிழ்தாசன்--- (8-Feb-12, 6:19 pm)
பார்வை : 229

மேலே