எனைக் கொல்லும் எனது உடல்

எப்படி இப்படி திடீர் மாற்றம் ?
எனக்கேன் நடக்குது பயங்கர அதிசயம் ?
ஏழு மாச கர்ப்பவதி நானு...!
ஏனோ எனக்குள்ளே ஹார்மோன் மாற்றம்...!
மீசை நல்லா கரு கருன்னு மொளச்சிது...!
தாடி கூட அஜித்தைப் போல் படர்ந்தது...!
குரலும் கூட கணீரென மாறியது....! - என்
கணவனின் அன்பு அப்படியே இருந்தது..!
என்னைக் கண்ணாடியில் பார்க்கிறேன்
ஒரு ஆணின் வயித்தில் கர்ப்பம் இருப்பதாய்...!
பொறக்கும் புள்ளைக்கு புட்டிப் பால் ரெடி - சரி
பொறக்குற புள்ள என்ன
அப்பான்னுதானே கூப்பிடுவான்.....?
அவனுக்கு எப்படி என் நெலம சொல்லுவேன்..?
அடக் கடவுளே இப்ப நான் என்ன செய்வது ?
அவருக்கு ரெண்டாம் கல்யாணம் செய்வதா ?
அவளுக்கும் நான் அண்ணனா...? அனாதையா ?
குழப்பத்தில் தவிக்கிறேன்....எனைக்
கொல்கிறது என் உடல்......! .

எழுதியவர் : (8-Feb-12, 6:27 pm)
சேர்த்தது : ரஞ்சிதா
பார்வை : 221

மேலே