வாழும் விதம்

ஜீரோவாக பிறந்த பலரும்
ஹீரோவாக மறைவர்
ஹீரோவாக பிறந்த பலரும்
ஜீரோவாக மறைவர்
பின் என் இந்த கொலைவெறி
இடைப்பட்ட காலத்தில்

பிறக்கும் போது நாம் அழுவோம்
மறையும் போது மற்றவர் அழவர்
எனவே அழுகை நம் உடன்பிறப்பு
இதன் இடையில் சிரிப்பவன் மனிதன்
அழுகையும் சிரிப்பும் நம் வாழ்கையில்
பகலும் இரவும் போல, உதயமும் அஸ்தமனமும் போல

நல்லவை செய்தவன் குடும்பம் வாழ்த்தப்படும்
அல்லவை செய்தவன் குடும்பம் சபிக்கப்படும்
வாழ்த்தப்பட்ட குடும்பம் வளரும்
சபிக்கப்பட்டவன் குடும்பம் அழியும்
பிச்சை இடும் நிலைமை வேண்டும்
பிச்சை எடுக்கும் நிலைமை வேண்டாம்

காம பசி வேண்டாம்
கேள்வி பசி வேண்டும்
காதல் பசி வேண்டாம்
கல்வி பசி வேண்டும்
உணவு பசி வேண்டாம்
தான பசி வேண்டும்


உன்னதமான உழைப்பில்
உருவான வாழ்கையில்
உயர்வான இடத்தில
இந்திய மக்கள் அனைவரும்
வாழும் வாழ்க்கை காண
கண்கள் துடிக்குது அய்யா

எழுதியவர் : கீதா Balasubramanian (8-Feb-12, 9:14 pm)
Tanglish : vaazhum vitham
பார்வை : 308

மேலே