கவின் மழலை..!!!
ஒளிவீசும் கருவிழிகள் ஒயிலான புருவங்கள்
பிறைபோல சிறுநெற்றி வளைவான சிறுகாது
மெத்தென்ற கண்ணங்கள் மொட்டான உதடுகள்
அழகான குறுங்கழுத்து எழிலான மென்மேனி
வாழைதண்டு கைகள் முருங்கைகொம்பு கால்கள்
பொக்கைவாய் சிரிப்போடு பூவான முகத்தோடு
கரங்களை முன்னும் பின்னும் அசைந்து
எட்டுவைத்து எட்டுவைத்து நடை நடந்து
உயிர்கொண்ட ஓவியம் ஓடி வரக்கண்டால்
கண்களும் இதயமும் கவிதான் பாடாதோ!!