கண்ணக் கட்டிக்கிட்டு நீதி தேவத...!

அத ஏண்டா நீ பாத்தே...?
ஆபாச படமுன்னு அகப்பட்டுப் போனே..!

வரிசையில் நின்னு வெயிலிலே காஞ்சி
வண்ணமா ஒனக்கு வாக்கையும் போட்டு
வாதாட எனக்காக சட்டசபை அனுப்புனா
கால விரிச்சி நீ கடைசிலே ஒக்காந்துட்டு
கலர் கலர் செல்லுலே கருமாந்திர படம் பாத்த..!
காரணம் கேட்டா கற்பழிப்பு காட்சிய
கண்ணியக் கண்ணோடு பார்தேனுன்ன...!
பெண்கள் மேம்பாட்டு அமைச்சராம் நீயி...!
அடப் பாவி...!

வெத்து ஒடம்பா வறுமை ஆக்குது
வெள்ளாம எல்லாம் தருசா கெடக்குது
வெக்கங்கெட்ட பயலே ஏசியில் இருந்து
வீணாக என் ஓட்டை ஏண்டா கெடுக்குரே..?
வெத்து ஒடம்ப ரசிச்சி வீணாப் போகுற ?

ஆயிரம் சொல்லு காரணம் - நீ
அசிங்கப் புடிச்சே சாகனும்
தின்ன கொழுப்பு நீ என்ன செய்வ ?
கண்ணக் கட்டிக்கிட்டு நீதி தேவத...!

எழுதியவர் : (9-Feb-12, 11:07 am)
பார்வை : 299

மேலே