முயற்சிதான் உண்மைங்க!

முயற்சி என்பது திருவினையாக்கும்
ஆன்றோர் சொன்ன அமுத வாக்கு
முழுமை பெற்ற முயற்சியாலே
முழுமையான மனிதன் உருவாகிறான்
வரலாறு காட்டும் உண்மையிது
வரலாற்று சான்றை பாருங்களேன்

கரிகாலன் என்ற சோழன்
புலிக்கொடி ஏந்திய புலி
பதிமூன்றாம் அகவையிலே
நரை முடித்து நீதி செய்தான்
இதுவன்றோ முயற்சி!

மொகலாய சக்கரவர்த்தி
பதிநான்காம் அகவையில் அரியணை ஏறி
மதசக்கிப்புத்தன்மையை மனதில் கொண்டு
பார்போற்றும் அக்பர் செய்தது முயற்சிதானே!

முடியாது என்பது என் அகராதியில் இல்லை
என்று முழங்கிய நெப்போலியன் எடுத்தது
முயற்சிதானே!

பிளேட்டோ என்ற தத்துவ ஆசான்
சாக்ரடிஸ் அரிஸ்டாட்டில்
போன்ற தத்துவ ஞானிகளை உருவாக்கியது
முயற்சிதானே!

வறுமையைத் தேடி வறுமையில் வாடியே
மூலதனம் என்ற நூலைச்சமைத்த
காரல்மாக்ஸ் செய்தது முயற்சிதானே!

உலகைக்குலுக்கிய ருஷ்யபுரட்சியை
1917 ல் லெனின் சாதித்தது முயற்சிதானே!

1789 ல் பிரெஞ்சுப்புரட்சியில்
பாட்டாளிவர்க்கம் பாஸ்ட்டில் சிறைச்சாலையை தகர்த்தது முயற்சிதானே!

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
வான்புகழ் தமிழின் வாக்கு

சமுகப்பார்வையோடு முயற்சி செய்யுங்கள்!
சரித்திரம் படையுங்கள்!

எழுதியவர் : பொற்செழியன் (10-Feb-12, 8:14 pm)
பார்வை : 662

மேலே