இருட்டல்ல உன் பாதை .... !

இருட்டாகவில்லை உன் வாழ்க்கை
சந்திரன் உனக்கு வழிகாட்டி

இருண்டுவிடாமல் உறுதியாக
உன் வழிப்பாதையில் பயணி

உன் தைரியம்தான் உன் முயற்சி
உன் வழிகாட்டுதல் உன் இலக்கு

வாழும் வரை உன் போராட்டம்
வீழும் வரை உன் உயிரோட்டம்

துவண்டுவிடாமல் துணிந்து நில்
துன்பம் உன்னை துரத்தும்
வறுமை உன்னை வாட்டும் - அனால்
நம்பிக்கை வழி காட்டும்
உறதி கொள் ! உயர்ந்து நில் !!

இருட்டல்ல உன் பாதை ....... !


-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (12-Feb-12, 10:51 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 205

மேலே