தலைப்புச் செய்தி

ஆஹா...ஆஹா....என்னே தெய்வீக சுகம் !
அதிகாலை நேரம் அருமையான பக்தி மணம்
அழகுமலர்களின் மாலையில் நறுமண வாசம்
அமைதி நிறைந்த இதயம் - கடவுளை வணங்கி
அருள் பொங்க திருப்புகழ் பாடி ......
ஆனந்த மனத்தோடு ....
அன்றைய செய்தித்தாளை பிரித்தேன்...!

தலைப்புச் செய்தி :

கணவன் தலையில்
கல்லைப் போட்டுக் கொலை....!
எண்பது வயது மனைவி கைது...!

அடுத்த செய்தி...

பாலியல் பலாத்காரத்தில்
அப்பாவி ஆண் ஒருவர்
ஐந்து பெண்களால் கொல்லப் பட்டார்

இப்படி நிறைய முக்கிய செய்தியை படித்து
இறுதிப் பக்கத்தை மூடிய போது......

பேயைப் பார்த்ததுபோல என்னைப் பார்த்து
என் வீட்டு நாய் பயந்து ஓடியது...தலை தெறிக்க.!

என் தெய்வீக முக வசீகரம் எங்கே தொலைந்தது?

என் மனசுக்குள் பிசாசு நுழைந்து விட்டது

என் பூஜை அறை கடவுள் புகைப் படங்கள்
என்னை பயமுறுத்துகின்றன....!

எழுதியவர் : (14-Feb-12, 6:54 pm)
பார்வை : 178

மேலே