மரண வாசல்!

தேனினை திருடி செல்லும் வண்டுக்கு
மலர்கள் மீது காதல் இல்லை!
தொடாமல் தொட்டுசெல்லும்
உன் துப்பட்டாவிற்கு
காற்றின் மீது காதல் இல்லை!
இருளை வண்ணமாக்கும் நிலவிற்கு
இரவின் மீது காதல் இல்லை!
வாசமில்லா மலரினை சுவாசித்தேன்
மரணத்தின் வாசலை தரிசித்தேன்!