அந்நாள் எந்நாளோ?
சிறகடித்துப் பறந்தேன் வண்ணத்துப் பூச்சியாக
ஒயிலாக நடந்தேன் அன்னமென
கவியிசைத்துப் பாடினேன் பூன்குயிலென
கலைநடம் பயின்றேன் எழில் மயிலென
களிநடம் புரிந்தேன் என் இனிய தோழியருடன் உல்லாசமாய்
சிறு சிறு சண்டை என் அன்பு சகோதரர்களுடன்
வீண் பிடிவாதம் என் அன்னையிடம்
வக்குவாதமோ அறிவூட்டிய தந்தையிடம்
குட்டிக் குட்டிக் குறும்புகள் என் கொஞ்சும் சிறார்களுடன்
பட்டறிவு விவாதமோ பண்புடன் உடன் பணியாற்றுவோரிடம்
எட்டி எட்டி நின்றாலும் தொட்டுத் தாலிகட்டி
வேலியிட்டவர்
விருப்பம் இருந்தாலும் வெளியிட முடியாதவர்
வேதனை விரக்தி விரக தாபம் யாவும் முடிந்து
விவேகம் பிறந்து
வெள்ளி முளைத்தது
அறிவெள்ளி முளைத்தது
காட்டில் தனித்திசைக்கும்
பூங்குயிலின் நாதம்
புலம்புகிறது தனிமரமாய்
புவிமேடை தன்னில்
மீண்டும் திரும்பா வசந்தங்கள்
மேல்லோடை மேல் சில்லென வீசும்
குளிர்காற்றின் துணையுடன்
தென்றல் தாலாட்ட
வெள்ளருவி பூமேனிஎங்கும் குளிர்விக்க
வசந்தப் பந்தல் வா என அழைக்க
வைகைஎன பெருகிவரும்
உள்ளப் பெருக்குடனே
பூமகளாய் பாமகளாய் நாமகளாய்
நளினமுடன் வீற்றிருப்பாள்
நங்கையிவள் நானிலத்தில்
புதிய கனவுலகில்
வருமா ? அந்நாள் மீண்டும் ?
இது ஒரு நங்கையின் புலம்பல்