மனம் பரவசமாகியது!
மின்சார ரயில் பயணம்,
அலுவலகம் செல்ல ரயில் ஏறினேன்,
கூட்டம் என்னை நெருக்கியது;
ரயில் கூவிவிட்டு விரைந்து ஓடியது,
உட்கார ஓரிடத்தில் இடம் கிடைத்தது,
மனதில் கவலையும், படபடப்பும்;
என் பார்வையை எதிரில் ஓடவிட்டேன்,
என் எதிரில் ஒரு மூன்று வயதுக் குழந்தை,
கள்ளமில்லாச் சிரிப்புடன் பால் வடியும் முகம்;
குழந்தை என்னைப் பார்த்து சிரித்தது,
நானும் குழந்தையைப் பார்த்து சிரித்தேன்,
குழந்தையாகிக் கவலை மறந்தேன்,
மனம் பரவசமாகியது!