வாழ்ந்தென்ன பயன்

ஏகாந்தமே உன்னை தேடி அலையும் போதெல்லாம்
தூரம் சென்று துன்புறுத்துகின்றாய்
வேண்டாத போதெல்லாம்
விரட்டி வந்து ஒட்டிகொள்கிறாய் !!

எதை எண்ணுவது எதை சொல்லுவது
என்று யார் யாரோ சொல்லிவைத்த போதிலும்
அந்த தொன்மை தோற்று புதுமை புழுதி
சிறுவனின் சட்டையில் ஒட்டுவது போல்லாயிற்று!!

என்ன வாழ்கையிது !!

கண்ணிளந்தவரின் கற்பை கரைக்கும் கண்கள் !
வாயிளந்தவரின் வாய்ப்பை வாங்கிகொள்ளும் வார்த்தைகள் !
முடவரின் முன் ஓடி ஜெயிக்கும் கால்கள்!
வெற்றி வெற்றி ! என்று வெட்டி கூத்து நடக்கும் மேடை!

நான் இங்கு என்ன செய்வேன் !

நடிக்கமுடியாமல் துடிக்கின்றேன்!!
வாழ்வின் வாய்ப்பை பளிக்கின்றேன்!!!

எழுதியவர் : சுதாகண்ணன் (21-Feb-12, 7:37 pm)
சேர்த்தது : sujimon
பார்வை : 291

மேலே