எளிமை

ஆடம்பரப் பங்களா
அல்சேசன் உறங்க தனி கூண்டு
அபாரமான வாசல் கேட்டு
அம்மாடியோ என்று
அசரவைக்கும் பிரம்மாண்டம்

எனினும்......

வேலைக்காரச் சிறுமி
வாசலில் வரைந்த
குட்டியூண்டு கோலத்தின் அழகு

எளிமைதான்

எழில் என்றது

எழுதியவர் : (23-Feb-12, 10:34 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 196

மேலே