எழுந்து நில் மனிதா !
புயல் அடிக்கும்
புழுதிமண் தானே பறக்கும்
அடுக்கு மாடியெல்லாம்
அஸ்த்திவாரம் கழன்று
மடிந்து கிடக்கும்
குடிசை வீடுகள்
காற்றில் பறக்கும்
உயிரற்ற இவைகள்
வீழ்ந்தது வீழ்ந்த இடத்திலே ........
ஆனால் நண்பனே !
வீழ்ந்த பறவைகள் எழுகின்றன
தன் பொற்சிறகை விரிக்க முயல்கின்றன
பண்பாடிப் பறக்கின்றன
வீழ்ந்த மனிதனும்
முயன்று எழுகிறான்
முன்னேறிச் செல்கிறான்
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் நண்பா !
முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால்
எதிர்த்து வரும் புயலைக் கூட
தவிடுபொடியாக்கலாம்!