புன்னகையின் புகழிடமே!

அந்திமாலை நேரத்தில்

அடிவானத்தில் உறங்க செல்லும் பகலவனின்

ஒளிவெள்ளத்தில் ஆகாய தேவதையே செந்நிற

சாந்தினால் குளிப்பாட்டி அழகுபடுத்தபடுகின்றாள்.

அப்படி பட்ட ஆகாயத்து ஆரணங்கே வியக்கும் வண்ணம்

செந் சாந்து போல் மேனிகொண்ட மேகலையே!

உந்தன் அழகை கண்டு வெட்கம் கொண்டு

எத்தனை விண்மீன்கள் இன்று

விளிக்காமல் உறங்குகின்றனவோ தெரியலையே?

நீ எங்கோ விடும் மூச்சுக் காற்றுகூட என் முரட்டு மேனியிலே

மோகனமாய் வந்து தெமாங்கு இசைக்கின்றனவே!

பால்போன்ற முகத்தில்,

பட்டொளி வீசும் உந்தன் காந்தார கண்களில்

கலைமகள் கூத்தாடுவது என்னவோ

ஆழ்கடலில் அகால மதிய பொழுதில்

துள்ளிகுதிக்கும் சுராமீங்களின் காதல் விளையாட்டு போல் அல்லவா உள்ளது,

உந்தன் வாய்மொழிகள் வசீகரமாய்

என் காதுகளில் ஈசைக்கும்போது

மேனகையின் மென் மொழி இதுதானோ என்று

வியப்புற்றேனே அறிந்தாயோ ?

உந்தன் வார்த்தைகளில்

கசியும் ஈரகாற்றை கூட

இதுதான் கடற்க்கரை தென்றலின் தெமாங்கு கீதமோ என்று

நான் ரசனையில் ராஜ்ஜியம் நடத்தி இருந்ததையும்

அறிந்து தான் உந்தன் இதழ்கள் கூட

வெண்ணிலவின் அழகை கண்டு சிணுங்கிய

செந்தமரைபோல் அதிர்வுற்றனவோ ?

உந்தன் மென்னடையோ பெண் மயிலின்

பெருமைகொள்ளும் சிறுநடை போல் அல்லவா

பகோரமாய் காட்சி தந்தது.

உந்தன் கூந்தல்களின் கூத்தாட்டமோ

மழைகாலத்தில் தோகை விரித்தாடும்

மயில் இறகை போல் அல்லவா

என்னிதயத்தை வசீகரம் செய்தது.

உந்தன் மெல்லிடையோ சூறாவளி காற்றில்

அசைந்தாடும் நாணலின் அழகை தோற்கடிக்க அல்லவா

என் மனக்கண்முன் போராட்டம் நடத்தியது.

உந்தன் பாதத்தின் மேன்மையை கண்டு

சோபாவிற்குள் சிறை கொண்டிருந்த

வெண்பஞ்சு நூலிழைகள் கூட

உனக்கு வலிக்குமோ என்று அஞ்சனவே?

ஆழ்கடலுக்குள் பொதிந்திருக்கும் முத்துக்கள் கூட

உந்தன் மேனியில் பட்டால் உந்தன் பேரழகின்

பெருமை குறைந்திடுமோ என்று அஞ்சித்தான்

மூச்சி அடக்கி முத்தெடுக்க சென்றவனின் கையிக்குள் கூட அகப்படலையோ ?

என் ஆன்ற பெண்மானே,

அகல் விளக்கில் வீசும் ஒளிக்கூட

உந்தன் ஆத்மாவின் தூயிமையை கண்டு

பொறாமை கொண்டனவே கண்டாயோ?

உந்தன் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் கூட

ஏதோ விலைமதிக்க முடியா ஆற்றல் ஒளிந்திருப்பதை கண்டு ஆச்சிர்யப்பட்டேனே!

என் கண்ணே, உந்தன் குரலின் ராகத்தின் இனிமையை காண

எத்தனை நாள் ஏங்கி தவிப்பேன்

என்னை ஏம்மாற்ற துடிக்காதே

மீனவனின் துடிப்புபோல் இடைகொண்டவளே!

நீ புகழின் உச்சிக்கே சென்றாலும்

இந்த கவிஞ்சனின் உறவை ஒரு கணமாவது

யோசிக்க தவறாதே! அப்படிதவிறினால் அது உந்தன் பாவமல்ல

அது எந்தன் பாவம்.

அட சரித்திர நாயகியே

நீ என்றும் எந்தன் இதயத்தை வென்ற தேவதையே

அதை உறக்கத்திலும் மறக்காதே மாட்சிமையின் மரகதமே!!

எழுதியவர் : - எம்.எஸ்.சாஸ்திரி (29-Feb-12, 9:11 am)
சேர்த்தது : M.S.SASTRI
பார்வை : 288

மேலே