!!! ஒரு மீனவ பெண்ணின் புலம்பல் !!!
இலச்ச கணக்கான தமிழர்களை
ஈழ மண்ணில்
பறிகொடுத்தோம் - இன்னல்கள்
பல சுமந்தோம்...
போரை நிறுத்த வலியுறுத்தி
போராடி பார்த்தோம்
கத்தி கதறினோம்
காலில்கூட விழுந்தோம்
ஒரு பயனும் இல்லை
ஒழிக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம்...
நம்மீது நடத்தப்படும்
இனவெறி படுகொலைக்கு
இதுவரை தீர்வு இல்லை
என்னவென்று சொல்வது
யாரைப்போய் கேட்பது...???
தினம் தினம் படுகொலைகள்
கொலைவெறி தாக்குதல்கள்...
சிறைபிடிக்கும் சம்பவங்கள்
சித்திரைவதை கொடூரங்கள்...
தொடர்ந்து நடக்குதுங்க
தொந்தரவு தாங்கலைங்க...
போராட்டம் பண்ணி பார்த்தோம்
உண்ணாம கிடந்து பார்த்தோம்
மத்திய அரசுக்கு
மண்டையில ஏறலைங்க - எங்க
உப்பு கண்ணீர் ஒரைக்கலிங்க ...
கடலுக்கு சென்றவனோ
கரை திரும்பும்வரை - எங்க
தாலிக்கு உத்திரவாதம்
சத்தியமா இல்லீங்க - நாங்க
பாவப்பட்ட ஜென்மங்க...
புயல் வந்து சாகலிங்க
கடல் பொங்கி சாகலிங்க - அந்த
சண்டாள பாவிங்க
சுட்டுத்தான் கொல்லுறாங்க...
கச்சத்தீவ அவங்களுக்கு
யாரைகேட்டு தந்தீங்க?
நாங்க எத கேட்டாலும்
எட்டி ஏன் நிக்கிறிங்க?
கச்சிவேட்டி கட்டிக்கிட்டு
கையெடுத்து கும்பிடிங்க - எங்க
கண்ணீரை துடைக்காம
எங்க போயி ஒலிஞ்சிடிங்க?
சிங்கள அரசுக்கும் மத்திய அரசுக்கும்
கிறுக்கு புடிச்சி போச்சுதுங்க - எங்க
சித்தமெல்லாம் வேகுதுங்க...
கடலை நம்பி வாழுருங்க
கண்ணீருல சாகுறங்க
கண்டுகாத அரசாங்கம்
கைகட்டி நிக்குதுங்க...
மீன் பிடிக்கும் படகை உடைத்து
உயிரை சிதச்சுபுட்டான்
வலையை அறுத்துவீசி
பசியை விதச்சிபுட்டான்
சண்டாள சிங்களவன்
ஆணவத்த காட்டிபுட்டான்...
தெனம் தெனம் சாகுறங்க
தேம்பி தேம்பி அழுவுருங்க
அரசாங்கத்த நம்பி நாங்க
ஆத்தோட போறமுங்க...
எங்களுக்கும் தீர்வு வேணும்
பசிதீர வாழ வேணும் - அந்த
அரசுகிட்ட சொல்லிடுங்க
கால் புடிச்சி கேட்குறங்க...
தமிழனென்றால் கேபலமா
தரம்கெட்ட தகரங்களா
ஏனிங்கு நினைக்குறாங்க?
இரக்கம் காட்ட மறுக்குறாங்க?
அரசனை நம்பி
புருசனை கைவிட்டோம் - தினம்
பசியில் சிறைபட்டோம்
இனி நாங்க என்ன செய்ய?
தீர்விருந்தா சொல்லுங்களேன்...!!!
குறிப்பு;. தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களவ ராணுவத்தால் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும், சிறைபிடிக்கப்பட்டும் வருவதை என்னி எழுதியது.