கூடங்குளம்

கூடங்குளம் அணுஉலை வேண்டுமா... வேண்டாமா... என்பது நம்மில் பலரின் கேள்வி? ஒரு தரப்பினர் வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் வேண்டாம் என்றும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

1988 ஆம் ஆண்டு அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், ரஷ்ய நாட்டுப் பிரதமர் மிக்கைல் கொர்பசோவும் கையெழுத்திட்டனர். அன்றைய நாள் முதலே அதற்கு எதிராக போராட்டங்கள் நடக்க தொடங்கின.

2008 ஆம் ஆண்டில் கூடுதலாக மேலும் ஆறு அணுமின் உலைகளை இங்கு உருவாக்க இந்திய அணுமின் கழகத்துடன் ரஷ்யா உடன்பாட்டை செய்து கொண்டது. இதன் மூலம் 1170 மெகா வாட் அணுமின் திறன் கொண்ட நான்காம் தலைமுறை WER1200 வகை அணுமின் உலைகளை வழங்கும்.

ஆரம்பத்தில் இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றபோதும், ஒருவேளை அணுஉலை வெடித்தால் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு நிகழ்த்திய பாதுகாப்பு ஒத்திகை அப்பகுதி மக்களிடையே பீதி எழ ஒரு காரணமாக அமைந்தது எனலாம்.

மக்களின் அச்சத்தை போக்க அமைக்கப்பட்ட மத்திய, மாநிலக்குழுக்கள் கூடங்குளத்தை மாறிமாறிவட்டமிட்டு சென்றாலும், போரட்டக்குழுக்களின் கேள்விகளுக்கு அவர்கள் செவிமடுக்கவில்லை என்பது சற்று வேதனைதான்!

கூடங்குளத்தை ஆய்வுசெய்த அப்துல்கலமும் அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான், சுனாமி ஏற்பட்டாலும் எந்தவித பதிப்பும் இல்லை என்றார். இருப்பினும்அணுக்கழிவுகளை என்ன செய்வது என்ற கேள்விக்கு, கடலில் போடலாம் அல்லது நிலத்தில் புதைக்கலாம் என்கிறார்.

இந்த பூமி நமக்கு மட்டும் சொந்தமில்லை, நம் வருங்கால சன்னதிகளும் வாழவேண்டிய பூமி, அணுக்கழிவுகள் புதைக்கபட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், மேலும் அக்கழிவுகளை இருபத்துநான்கு ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கப்பட வேண்டும் இவை சாத்தியமா? கடலில் போடலாம் என்று மற்றுமொரு வழியை கூறுகிறார்கள். கதிரியக்கம் கடலில் கலப்பதால் கடலின் வாழ்வாதாரம் பதிக்கப்படும் அல்லவா?

மின்சாரபற்றக்குறையால் தமிழகம் தவிக்கும் வேளையில் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கினால் ஐம்பது சதவீதம் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படும் என பிரதமர் கூறியிருப்பது யாரை திருப்திபடுத்த...?

ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே வெப்பம் நிலவும் அமெரிக்க, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளே சூரிய மின்சாரம் தயாரிக்கும் போது, ஆண்டு முழுவதும்,வெப்பம் நிலவும் நம் நாட்டில் சூரிய மின்சாரம் தயாரிப்பது சாத்தியம் தானே? குறைந்த செலவில் அதிக மின்னுற்பத்தி செய்ய வழிகள் இருந்தும் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவான் ஏன்?

அணுஉலை பாதுகாப்பானது, நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை, கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் தொலைவில் உள்ளது, எந்த விதமான கதிர்வீச்சு ஆபத்தில்லை என் மத்திய, மாநில அரசுகள் அறிக்கை விடுகின்றனர்.

விபத்தே நடக்காது என்றால் அணு விபத்து இழப்பீடு சட்டத்தை ஏற்படுத்தியது ஏன்? அணு பாதுகாப்பு ஒத்திகை நடத்தியது ஏன்? அணுஉலையை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதிப்பது ஏன்?

ஜேர்மன், ஜப்பான் போன்ற உலக நாடுகளே அணு உலைகளை மூடிவரும்
திறந்தேயாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பது முறையா?

பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கைக்காக ஓடியோடி பொருள் ஈட்டும் நாம், நாளை அவர்கள் நலமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வழிவகுக்க வேண்டாமா?

நாளைய தலைமுறை கவலையின்றி வாழ கூடங்குளம் அணுஉலை திட்டத்தை இன்றே போராடி எதிர்ப்போம் ........ ஒற்றுமைவோடு போராடுவோம்.....

எழுதியவர் : ஜெயதேவி (4-Mar-12, 11:03 am)
பார்வை : 501

மேலே