காதலின் தமிழ் முகம்

பசையொடு பிணையும்
நசையொடு நயமும்
தண்ணோடு தகையும்
தலையளி தலைக்கையும்
நேர்ச்சியும் புகற்சியும்
பெட்டலும் முழுவலும்

புரிவுடன் மேவுதல்
மதியுடம்படுதல்
பற்றுடன் பகிர்தல்
மனமுருகிடுதல்
நட்புடன் நயத்தல்
விரும்புதல் எனவும்

பல முகம் கொண்டு
ஒரு பொருள் தந்து
உரைப்பது ஒன்றே - அஃது
பத்திமை எனப்படும்
காதல் என்பதே ஆகும்

எழுதியவர் : (4-Mar-12, 2:27 pm)
பார்வை : 178

மேலே