என் தூக்கத்தை யார் கலைப்பார்!!?.....
நான் அள்ளி வீசிய முத்து!
அவருக்கு அன்பளிப்பாய் கொடுத்த சொத்து!விலைக்கு கிடைக்காத வித்து! என்னை விரட்டியடித்தான் மதி பித்து!!
அன்று நான் அவரிடம் அன்பாய் இருந்தேன்! அதனாலன்றோ அரும்பை மலர்ந்தேன்
மலர்தான் மலர்ந்திருக்கிறது என்று மகிழ்ந்தேன்! ஆங்கே முற்கள் இருப்பதை மறந்தேன்!
தொட்டியில் இட்டால் அழுவான்அதனால் மார்பினில் சுமப்பேன் - இன்று முளைத்துக்கொண்டதாம் சிறக்குகள் என் மார்பினை முட்டிப்பார்க்க!!.....
வேதனையில் அந்த நாட்கள் பித்துமனம் பிறந்திடுமோ?..பத்து மாதம் சுமந்து பெற்றேன்! பருவ வயதில் படிக்க வைத்தேன்!
மறக்க முடியாத நினைவுகளாய்
பேருந்தில் ஒரு தினம் - நான் நின்றுகொண்டு (பிள்ளைதனை) சுமந்திருந்தேன்!
கை நீட்டி பெற ஆளில்லை; கைகடுப்பு
வந்த பின்னும் கலங்கவில்லை, கட்டிப்பிடித்திருந்தேன்;கைகலப்பு செய்கிறான் கள்வன் மனைவி வந்த மாத்திரத்தில்!!......
அவரளித்த சொத்து ஆண்மகனே!
நீ தான் முத்து! கேட்கிறான் மதிகெட்டு
கேடு கெட்டவளே எனக்கெங்கே சொத்து?!!...
தாகத்துக்கு தண்ணீரில்லை!
என் மகனுக்கு வெந்நீர் வைத்தேன்!
மேகத்துக்கு கருமையில்லை!
அவன் மேனிக்கு மேருகிட்டேன்!
கடலுக்கு ஓசையில்லை என் கடமைக்கு
பாசை கற்றுத்தந்தேன்!! தந்துவிட்டான்
என் மகன் "தரித்தினியம்" என்னும்
தத்துவ விருது!!....
பேரக்குழந்தைகளை சுமக்க வேண்டிய
நேரம் என்று மகிழ்ந்திருந்தேன்!!
பேச்சை புடுங்கிய கடவுள் என்றுதான் மூட்சைபிடுக்கப்போகின்றானோ?... என்கிறான் என் புதல்வன்; பாசத்துக்கு ஆசைப்பட்டேன் சோகத்துக்கு அளவில்லை!...-அதனால் தான் தூக்கு கயிற்றில் என் உயிரை விட்டேன்!!;
தூங்க முடியவில்லை
அவன் வீட்டில் நிம்மதியாய்!!....... இனி மேல் என் தூக்கத்தை யார் கலைப்பார்??.......