என் மகளே !
எங்கள் வாழ்வில்
மலர்ந்த வசந்தம் - நீ
ஆடி திளைக்க வைக்கும்
பொன்னுஞ்சல் - நீ
உன் மழலை ராகம்
நான் கேட்டு ரசிக்கும்
இசையல்லவா...
உன்னுடன் கைபிடித்து
நானும் குழந்தையாகவா ...
உன் கைகளால் கலைக்கப்பட்ட
உணவை நீ ஊட்டும்போது
அமிர்தம் அல்லவா ...
கண்பொத்தி விளையாடி ...
கரங்களால் நீ சீண்டி ....
பாதங்களால் உதைக்கும்
உன் செல்ல உதையில்
பஞ்சாகி போகிறேன் ...
நீ சிரிக்கும் முத்துபல்லில்
பால் நிலவு தெரியுதடி ..
நீ எனக்கு மகளல்ல
கலை கின்ற என் தலைமுடியை
உன் பிஞ்சுவிரலால்
நீ கோதி - சில நேரம்
தாய்க்கே தயாகிறாய்...
சிதறாத உன் முத்தம்
தாய்மையின் அழகை
இன்னும் கூட்டுதடி...
உன் செல்லமான அரவணைப்பில்
கிறங்கித்தான் போகிறேன் ....
பூமிக்கு வந்த - நான்
வாழும் சொர்க்கமே - நீதான் !