மகன் துலைத்த மனிதாபிமானம்
பேருந்து நிலையத்தின்
பரபரப்பான நேரம் ,
அங்கே
ஒரு தாயின்
அழுகுரல் ,
நெருங்கி பார்த்தபோது,
டேய் தம்பி பாண்டியா
எங்கேடா என்னை
தனியாய் விட்டுட்டு போய்விட்டாய்,
எனக்கு கண்ணு தெரியலடா ,
வந்து கூட்டிட்டு போடா ,
நான் உன் கிட்ட என்னடா கேட்டேன்
உன் வீட்டில் ஓரமா ஒரு இடம்
உண்ண ஒரு வேளை கஞ்சி ,
வேறென்னடா கேட்டேன்
என்னை இப்படி
அனாதையாய் விட்டுட்டு போய்ட்ட !
பார்த்த கண்களில் எல்லாம்
கண்ணீர் மல்க
மகன் வடிவில் துலைத்த போன
மனிதாபிமானம் , மனசாட்சி , விசுவாசம்
மற்றவர்களின் வடிவில்,
கொஞ்சம் பணம் கொடுத்து
காவல்துறையிடம்
ஒப்படைக்கபட்டாள் அந்த அம்மா !