எது இன்பம்..!!

கோடிகோடியாய் சம்பாதிப்பது இன்பம்
நம் உறவுகள் நம்மோடு இருக்கும் வரை
பார்போற்றும் உயர்பதவியில் இருப்பது இன்பம்
நம் அதிகாரத்தில் ஆயிரம்பேர் இருக்கும் வரை
அழகான மாளிகை கட்டுவது இன்பம்
நம் குடும்பம் நம்மோடு வாழும் வரை
எல்லாமே இன்பம் இன்பம்
நம் நல்ல செயல்களால் எல்லோர்க்கும்
உதவும்படி நாம் வாழ்வோமானால்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (15-Mar-12, 9:47 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 216

மேலே