பதவி மோகம் தவிர்
நெருப்பில் நடப்பதாலோ
பணத்தில் மிதப்பதாலோ
நற்ப்பண்பை உதைத்தெறிந்தால்
நாளை தொலைத்தெறிந்தால்
வேளை வரும்சமயம் - வேடிக்கை
பொருள்பெறும் சமயம்
வேதனையில் நீ பதைக்க
உதவிக்கு இல்லாதொருவர்நிலை நிலைக்க - நினைக்க
நீகொண்ட பதவியில் நீ விழ
தன்தலையில் தானே தீ விழ
கண்ணிழந்த பின்னும் கர்வமெழ - இறுதியில்
பாவத்தின் பலனாய் பாடை எழ
கவிதையின் கருப்பொருள்:
சொந்த வாழ்விலோ
பணி இடத்திலோ
செய்யும் தொழிலிலோ -
புரிந்து செயலாற்ற
பதவி மோகம் தவிர்!