இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்
ஜனநாயகத்தை விலைபேசும்
எடைத்தேர்தல்

ஜனநாயகத்தின் பேரில்
பணநாயகத்திற்கு பரிவட்டம்

சில ஆயிரம் பணநோட்டுகளால்
மரணிக்கும் மக்களாட்சியின் மாண்பு

மதுமயக்க மதிமயங்கி
வாக்குகளை விலைபேசி
உரிமைகளை இழந்திடும்
இந்நாட்டு மன்னர்கள்

வாக்கு எண்ணிக்கை - இல்லை
பண எண்ணிக்கை முடிந்தது
பணநாயகம் பட்டாசு வெடிக்க
ஜனநாயகம் சுக்கு நூறானது.

எழுதியவர் : ஆ. தைனிஸ் (21-Mar-12, 7:06 pm)
சேர்த்தது : athainiscap
பார்வை : 231

மேலே