புதிய உலகு செய் இறைவா

கரும் காகத்தை
வண்ண மயில்
என்கிறார்கள்
கறும்பன்றியை
கறவை மாடு
என்கிறார்கள்
இங்கே
கலாச்சார சீரழிவை
நவ நாகரிகம் என்கிறார்கள்.......


துரியோதனன்
துகிலுரிக்கிறான்
அனைத்து
பாஞ்சாலிகளையும்
நாகரிகமென்னும் உருவில்...........

ஹே கிருஷ்ணா
பரம்பொருளே
எங்கிருக்கிறாய் நீ?

உன்னால் உன்னுமா
இந்த நாகரிக
பாஞ்சாலிகளின்
மானம் காக்க?

ஒரு பெண்ணின்
மானம் காக்கவே
ஓடோடி வந்தவன் நீ!
இன்று
ஏன்
அமைதி கொண்டுள்ளாய் ?

எனக்கு தெரியும்
உன்னால் முடியாது என்று
ஏனெனில்
பாண்டவர்களை மட்டும்
உன்னுடன் பாற்கடலுக்கு
அழைத்து சென்று
கௌரவர்களை
இப்பூமியிலேயே விட்டு சென்றாயே
இதோ பார்
அன்நூறுவரும் எடுத்துள்ள
மறுபிறவிகளை .......................

இப்போது
உன்னால் மட்டுமல்ல
வேறு எவராலும்
தடுக்க இயலாது
இந்த பாஞ்சாலிகளின்
துகிலுரிப்பை-ஏனெனில்
இந்த செம்மறியாட்டு
கூட்டத்தை பெண்ணாக
படைத்த உன்
பலவீனம் அறிந்த
கௌரவர்கள் எடுத்த
புது அவதாரம்தான்
இந்த நாகரிக கலாச்சாரம்.............

ஒரு பெண் தன்னை
தானே துகிலுரிக்கிறாள்
நாகரிகத்தின் பெயரால்!

இலையற்ற மரம் போல
காடற்ற மலை போல
மேகமற்ற வான் போல
மேலாடை நீக்கி
உள்ளாடை காட்டி
கர்வம் கொள்கிறது
இந்த ஆட்டு மந்தை!

கிருஷ்ணா
இப்போது உன்னை
எள்ளி நகையாடுகிறார்கள்
என்ன செய்ய
முடியும் என்று !

பாவம் நீ
உன்னால் என்ன செய்ய இயலும்
அடுத்தவன் துகிலுரித்தால்
மட்டுமே தடுத்து
பழக்கப்பட்ட உனக்கு
ஒரு பெண்
தானே துகிலுரித்து
மகிழ்ச்சி கொள்வது
புரியாத புதிராகத்தான் இருக்கும் உனக்கு

நம்புங்கள் ராமரே
நம்புங்கள் கிருஷ்ணரே
இது நீங்கள்
பிறந்த பாரத தேசம்தான்

ஆனால்
நடப்பது மகாபாரதமல்ல
நீங்கள் வந்து
தர்மத்தை நிலைநாட்ட
"மங்கை"பாரதம்

வந்துவிடாதீர்கள் இங்கே
மீறி வந்தால்
உங்களை தாக்க
பிரம்மாஸ்திரம் தேவை இல்லை
அதைவிட பல்லாயிரம்
மடங்கு வலிமையான
பெண்ணுரிமை
மனித உரிமை
எனும் அஸ்திரங்கள்
போதும் உங்களை
குற்றவாளியாக்கி
கூண்டில் ஏற்ற

"கற்புக்கரசி யார்?"
எனும் கேள்விக்கு
எங்கள் 60 கோடி
பாரத மங்கையரிடம்
உள்ள மாறாத
ஒரே பதில்
"கண்ணகி"..........????????

கிருஷ்ணா
நீ பாரத போரில்
வென்று வைகுண்டம்
சென்றுவிட்டாய்
இன்றாவது கண்
திறந்து பார்
உன்னை பலி வாங்க
கௌரவர்கள் எடுத்துள்ள
அசுர வளர்ச்சியை !

அன்று
ஒரு பெண்ணின்
ஆடை களைத்த
அவர்கள்
இன்று
கோடிகணக்கான
பெண்களின் ஆடைகளை
களைகிறார்கள்
நாகரிகமென்னும் உருவில் !

பரமபிதாவே
உன்னிடம் இந்த அடியேன்
வேண்டுவது
ஒன்றே ஒன்றுதான் .........!
இந்த பனியாரத்தை
விழுங்கி விட்டு
புதியதோர் லட்டு செய்!

ஆம்
கடவுளே
அழித்துவிடு
இவ்வுலகை !
தலைக்கு மேல்
வெள்ளம் சென்ற பிறகு
எனக்கு வேறு
பாதை புலப்படவில்லை ..............

எந்நாட்டு மங்கையர்களின்
மானம் காத்திட !
தாய் மண்ணின்
கற்பு கறைபடாமலிருக்க!
மனித இனத்தின்
மகத்துவம் காக்க !
தயவு செய்து
அழித்துவிடு இவ்வுலகை!
நீ இருந்தது
நீ இருப்பது
நிஜமென்றால் !

எழுதியவர் : Ramakrishnan (21-Mar-12, 9:39 pm)
பார்வை : 254

மேலே