விடியலே இல்லை
ஊரெங்கும் விடிந்தது
வாழ்க்கை விடிவதாக
தெரியவில்லை
சந்தோஷம் பொங்கி
வாழ்ந்து வந்தோம்
சந்தோஷம் நீங்கி
சாகடிக்கப்பட்டோம்
ஊரெங்கும்
அமைதியாய் இருந்தது
சமாதியாய் நிறைந்தது
சிறுகாயம் என்றாலே
தாங்க மாட்டாள்
துப்பாக்கி குண்டாலே
தாக்கப்பட்டாள்
வீடு,வாசல்
ஏதுமில்லை
மிச்சமிருந்த வீடு
வீடாக இல்லை
தொடங்கியதே போர்
போனதே பல உயிர்
வான் மழையில்
குளித்தேன்
குண்டு மழையில்
உடல் துளைத்தேன்
நதிகளில்
நீர் ஓடவில்லை
கண்ணீ ர்
பெருக்கெடுத்து ஓடுகிறது
மைந்தனோ மண்குழியில்
மனைவியோ சாக்கடை ஆழியில்
தீபாவளிக்குதான்
பட்டாசு சத்தம்
தினம் தினம்
அழுகுரல் கத்தும்
இரும்பால் ஆன
இதயம் கொண்டவர்கள்
கரும்பாய் நினைத்து
குருதி பிழிகிறார்கள்
பாதி உயிர்
பயத்தாலே போச்சு
மீதி உயிர்
பசியாலே போச்சு
விடியலே வரவில்லை
விதியும் விடவில்லை
சதியும் ஓயவில்லை....