உன்ன நானும் பிரிஞ்சதால

நெஞ்சில நேசம் வச்சேன்
மனசில பாசம் வச்சேன்
உசிருல உன்னவச்சேன் அன்பாலதான்
உன்ன நான் பிரிஞ்சு வந்தேன்
தன்னந்தனியாக நானும் நின்னேன்
இந்தத் துன்பம் வந்ததிங்கே யாரால்தான்
சூரியனப் பிரிஞ்சதால
சோகங்கொண்ட பூமியது
ஒவ்வொரு நாளும் பைத்தியமா
சுத்திக் கெடக்கும்
உன்ன நானும் பிரிஞ்சதால
உள்ளம் கொண்ட சோகத்துல
உலகில் வாழும் காலமெல்லாம்
பித்துப் பிடிக்கும்!

எழுதியவர் : சுதந்திரா (10-Sep-10, 11:22 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 361

மேலே