அதிசயம் ஏதேனும் நிகழாதா..!
வெளி வராத வார்த்தைகளில்
கவனம் செலுத்தும் எனக்கு
தெரியவில்லை..
என்னை உனக்கு புரிய வைக்கும்
வார்த்தைகளை கையாள..
அதிசயமும் அமானுஷ்யமும்
நடக்கும் பூமியில்
என்னை நீ நேசிக்கும்
அதிசயம் நிகழாதா என தவமிருக்கிறேன்..
என்னை விட்டு எங்கோ ஒளிந்திருக்கும்
உந்தன் நிழலை எந்தன் நினைவுகள்
ஒருமுறையேனும் தீண்டாதா
என ஏங்கி தவிக்கிறேன்..