"சொம்பு.."

உயிரில்லை உணர்வில்லை
உரிமையுமில்லை உடன்பிறப்புமில்லை
எழுந்திரு என என்மீதே
தண்ணீர் தெளிக்கிறாய்
எழாதபோது எழுவென
கைவழிவந்து பட்டீரென
தலையோடு முட்டுகிறாய்
தலையில் தண்ணீர் ஊற்றி
தங்கமே குளியென
குளிப்பாட்டுகிறாய்
வ்க்..கென விக்கல் வந்து
பக்...கென கழுத்தை பிடிகக
தண்ணீரை தன்னுள் சுமந்து
பட்டெனவே விக்கலை வெட்டுகிறாய்
வீட்டிற்கு வந்தவர்களை
வந்துவந்தனம் செய்து முந்தி
வரவேற்ப்பு சொல்கிறாய்
இத்தனையும் சொய்துவிட்டு
பழசு என சொன்ன
பழித்தலை பொருக்காமல்
இன்று பரண்மேல் படுத்திருகிறாய்......
இப்பொழுதும் படுத்துறங்குகிறேன்
எப்படியும் நீ எழுப்பிவிடுவாய்
என்னுடன் பேசிடுவாய் என்ற
நம்பிக்கையில்....